தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு