தமிழக செய்திகள்

ரூ.10 லட்சம் லஞ்ச புகார்: நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

ரூ.10 லட்சம் லஞ்ச புகார் தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடந்த சாலை அமைக்கும் பணிக்கு காண்டிராக்ட் விட்டதில், சுமார் ரூ.3 கோடி தொகைக்கான இரண்டு பில்களை அனுமதிப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் கைமாறியதாக வந்த புகார் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சூப்பிரெண்டிங் என்ஜினீயர் மற்றும் காண்டிராக்டர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்