தமிழக செய்திகள்

குவாட்டருக்கு ரூ.10 அதிகரிக்கும்: டாஸ்மாக் மது விலை உயருகிறது மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

டாஸ்மாக் மது விலை குவாட்டருக்கு ரூ.10 உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மது விற்பனை மூலமே கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. குவாட்டருக்கு ரூ.10, புல்லுக்கு ரூ.40 விலை உயர்ந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மது விலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குவாட்டருக்கு ரூ.10 உயரும்

இதனால், இன்றோ அல்லது ஓரிரு நாளிலோ மது விலை குவாட்டருக்கு ரூ.10, ஆப்புக்கு ரூ.20, புல்லுக்கு ரூ.40 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதேபோல், பீர் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு ஒரு நாளைக்கு மது விற்பனை மூலம் கூடுதலாக ரூ.5 கோடியே 44 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1,974 கோடி அதிகமாக அரசுக்கு கிடைக்கும்.

டாஸ்மாக் மது விலை உயர்வதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் வருமானம் குறைந்துள்ள நிலையில், மது விலை உயர்வு மேலும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?