தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.‌2 கோடி மோசடி

திண்டுக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.‌2 கோடி மோசடி செய்த பெண்மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியை சேர்ந்த இடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ரூ 50 ஆயிரம் ரூ.1லட்சம் ரூ. 2 லட்சம் என பலவகையான ஏலச்சீட்டு நடத்தி இருக்கிறார். இதில் முருக பவனம் மட்டுமின்றி திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். அதில் பலருக்கு சீட்டு தவணை காலம் முடிந்தும் பணம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த ஒரு மாதமாக வெளியூர் சென்று விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். இதில் ரூ 2 கோடி வரை மக்கள் சீட்டு பணம் செலுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்