தமிழக செய்திகள்

பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி நிர்மலா. இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். இதைநோட்ட மிட்ட மர்மநபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை அனைத்து விட்டு, நிர்மலாவின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்தார். மேலும் அருகில் இருந்த நிர்மலாவின் செல்போனையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்