தமிழக செய்திகள்

8 பேருக்கு கல்வி மற்றும் மருத்துவ நிதியாக தலா ரூ.25 ஆயிரம் கருணாநிதி அறக்கட்டளை வழங்கியது

மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் கருணாநிதி அறக்கட்டளை வழங்கியது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

கடந்த மாதம் (பிப்ரவரி) வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் 17-3-2018 அன்று (நேற்று) வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்