தமிழக செய்திகள்

மீன் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கொள்ளை: கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து போலீசார் விசாரணை

மீன் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கொள்ளை அடித்து சென்றதை கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சேலத்தைச் சேர்ந்தவர் ஹமீது (வயது 25). இவர், சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானிகான் தெருவில் தங்கி உள்ளார். நண்பருடன் சேர்ந்து சென்னையில் மீன் மொத்த வியாபாரம் செய்கிறார். இவர், நேற்று முன்தினம் ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் அண்ணாசாலை பகுதிக்கு சென்றார். அங்குள்ள வங்கி ஏ.டி.எம். மூலம் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்ய முயற்சித்தார்.

ஆனால் ஏ.டி.எம். வேலை செய்யவில்லை. இதனால் ராயப்பேட்டை பகுதியில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், ஹமீதை வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹமீது, அண்ணாசாலை போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்