தமிழக செய்திகள்

பள்ளி ஆசிரியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு

ஊத்தங்கரை அருகே பள்ளி ஆசிரியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றனர்.

தினத்தந்தி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை முல்லை நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). தனியார் பள்ளி ஆசிரியர். இவர் ஊத்தங்கரை திருமகள் தியேட்டர் அருகில் கடந்த 8-ந் தேதி காலை ஸ்கூட்டரில் சென்றார். அங்கு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்திற்கு சென்றார். அந்த நேரம் அங்கு வந்த மர்ம நபர்கள் இவரது ஸ்கூட்டர் சீட்பகுதியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்த நிலையில் மீண்டும் வந்து பார்த்த போது பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து