கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது. எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பாஸ்டேக் முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறிய அவர், சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், இது ரூ.1.25 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவில் 81% லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குகிறோம். லித்தியம் அயனுக்கு மாற்றாக எனது அமைச்சகம் இன்று முன்முயற்சி எடுத்து வருகிறது. அரசு ஆய்வகங்கள் தொடர்பான அனைத்தும் ஆராய்ச்சி நடந்து வருகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களை உருவாக்க அமைச்சகம் முயற்சிக்கிறது.

மாற்று எரிபொருளுக்காக நாடு செல்ல வேண்டிய நேரம் இது என்பது எனது பரிந்துரை. இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் நான் ஏற்கனவே மின்சாரத்தை எரிபொருளாக்க பிரச்சாரம் செய்கிறேன். என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

முன்னதாக பாஸ்டேக் கட்டாயம் இனி காலநீட்டிப்பு கிடையாது. 8 வழிசாலை திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கழிவுநீரை கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து