தமிழக செய்திகள்

திருமணத்துக்கு வைத்திருந்த ரூ.4¼ லட்சம் நகை, பணம் கொள்ளை

திண்டிவனம் தனியார் பஸ் ஊழியர் வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த ரு.4¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

திண்டிவனம்

தனியார் பஸ் ஊழியர்

திண்டிவனத்தை அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் ரவி(வயது 55) தனியார் பஸ் ஊழியர். இவருடைய மனைவி சித்ரா(50) இவர்களின் மகள் பச்சையம்மாள் என்பவருக்கு வருகிற 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ரவி பணிக்கு சென்று விட்டார். திருமணத்துக்கு ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சித்ரா, இவரது அக்கா ஞானசவுந்தரி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் திருமணத்துக்காக வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 2 வீடுகளில்

அதேபோல் அருகில் உள்ள ஞானசவுந்தரி என்பவரின் வீட்டில் புகுந்து பவுன் நகை, ரூ.10 ஆயிரத்து 500 ரொக்கம், அதே பகுதியை சேர்ந்த கோகிலாம்மாள் என்பவரின் வீட்டில் புகுந்து பவுன் மோதிரம், பென்ஷன் பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளயைடித்து சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அசாருதீன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகளை சேகரித்து சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தனியார் பஸ் ஊழியர் உள்பட அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் சாரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...