கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கன்னியாகுமரியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டிற்கு தலா 5,000 ரூபாயும், அதேபோல் பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 4,100 ரூபாயும், நெற்பயிர் சேதம் - ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், பிற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது