தமிழக செய்திகள்

மழையால் சேதமடைந்த பகுதிகளை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் - ஆர்.சரத்குமார் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த பகுதிகளை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த டிசம்பரில் துவங்கிய நிவர் புயல், புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த தொடர் கனமழையால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்ததில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழையால் சேதமடைந்த பகுதிகளில் பாதிப்பை முழுமையாக கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து