தமிழக செய்திகள்

பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்

கோத்தகிரியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட அலுவலர்கள் கோத்தகிரி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...