தமிழக செய்திகள்

இறந்த பெண் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது ரெயில்வே அதிகாரிகளின் கடமை

இறந்த பெண் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது ரெயில்வே அதிகாரிகளின் கடமை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

தினத்தந்தி

சென்னை,

திண்டுக்கலை சேர்ந்த இந்துராணி (வயது 38) என்பவர், சென்னையில் வசிக்கும் தன் தாயை பார்க்க வந்துள்ளார். சென்னை புறநகர் மின்சார ரெயிலில் அவர் பயணித்த போது, கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரெயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பயணச்சீட்டு தொலைந்து விட்டதால், அவர் பயணி அல்ல எனக்கூறி, கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ரெயில்வே அதிகாரிகளின் கடமை. கதவுகள் இல்லாததால் புறநகர் ரெயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. ஆனாலும், இதன் மூலம் அதிகாரிகள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததாக கூறி இழப்பீடு வழங்க மறுக்க முடியாது. போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாத ரெயில்வே நிர்வாகத்துக்கும் இந்த அசம்பாவித சம்பவத்தில் பங்கு உள்ளது. அதனால், பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீட்டை 6 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்