தமிழக செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி

ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

ஓசூர் பாகலூர் ரோடு விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 59). ஓசூரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி நாகராஜன் செல்போனுக்கு பேசிய மர்ம நபர், தான் அரசு கொள்முதல் துறையில் இருந்து பேசும் ராணுவத்தின் உயர் அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் நாகராஜன் நிறுவனத்தில் இருந்து ராணுவத்திற்கு உரிய தளவாட பொருட்கள் கொள்முதல் செய்வதாக உறுதியளித்து அதற்காக, 80 ஆயிரம் ரூபாய் தருமாறும் கேட்டுள்ளார். அதை நம்பி நாகராஜன் அவர் கூறிய மொபைல் எண்களுக்கு பணத்தை ஆன்லைனில் அனுப்பினார். அதன் பின்னர் அந்த நபர் மொபைல் எண்ணை எடுக்கவில்லை; பின்னர் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன் இது குறித்த கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு