தமிழக செய்திகள்

“நம்ம ஊரு திருவிழா” கலைநிகழ்ச்சிக்கு ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு - கலை பண்பாட்டுத்துறை தகவல்

சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலைவிழாவுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பொங்கல் பண்டிகையினையொட்டி நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைவிழாவுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, 3 நாட்கள் நடைபெறும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது