தமிழக செய்திகள்

ரூ.1,000 பயண அட்டை விற்பனை: 23-ந்தேதி வரை நீட்டிப்பு

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில்,விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில், 2024 ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரையிலான செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 11-ந்தேதி ரம்ஜான் பண்டிகை, 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பு, 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்