தமிழக செய்திகள்

புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம் அபராதம்

புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம்

களியக்காவிளை:

நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் அறிவுரைப்படி மேல்புறம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சார்லின் தலைமையில் அதிகாரிகள் களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை சோதனை நடத்தினர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதில் 9 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1,800 அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீகுமார், செயின்ஸ் குமார், தங்கராஜ், ஜான் பெனடிக்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT