தமிழக செய்திகள்

ரூ.40 லட்சம் லஞ்சப்புகார்: சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

சென்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று புகார் கொடுத்துள்ளார்.

சென்னை,

சென்னையில் ரூ.40 லட்சம் லஞ்சப்புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

ரூ.40 லட்சம் லஞ்சம்

சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புகாரி. இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுண்ட்டர் செய்தவர். தற்போது இவர் மீது சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று அவர் பரங்கிமலையில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நேற்று அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

விசாரணையில், அவர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதன்படி பல மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் புகாரி, தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.