தமிழக செய்திகள்

“ரூ.500 சம்பள உயர்வு போதுமானதல்ல” - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தில் (டாஸ்மாக்) 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள் மற்றும் 3,090 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,805 சில்லரை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்த நிலையில் ரூ.500 சம்பள உயர்வு போதுமானது அல்ல என்றும், சம்பள உயர்வை அதிகரிக்க கோரி வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு