தமிழக செய்திகள்

கட்டண உயர்வால் நாளொன்றுக்கு அரசுக்கு வரவு ரூ.8 கோடி இழப்பு ரூ.4 கோடி: முதல் அமைச்சர் பழனிசாமி

பேருந்து கட்டண உயர்வால் அரசுக்கு வரவு ரூ.8 கோடி என்றாலும் ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். #EPS

தினத்தந்தி

மதுரை,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தினை கடந்த 19ந்தேதி நள்ளிரவில் உயர்த்தி அறிவித்தது. இது அதற்கு அடுத்த நாள் முதல் அமலுக்கு வந்தது.

இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தினை குறைத்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என கூறினார்.

தொடர்ந்து அவர், போக்குவரத்து கழகத்தில் 112 சொத்துகளை தி.மு.க.வினர் அடகு வைத்தனர். புதிய பேருந்துகளின் விலை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பேருந்து கட்டணம் ஆனது மக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முடிந்தவரை குறைக்கப்பட்டு உள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என கூறியுள்ளார்.

கட்டண உயர்வால் நாளொன்றுக்கு வரவு ரூ.8 கோடி என்றாலும் ரூ.4 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

#EPS #Chennai #bus #fare #Edappadipalanisamy #TNgovernment

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்