சென்னை,
சென்னை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை மூலம் மோட்டார் வாகன விதிகளின் கீழ் நிலுவையில் உள்ள 14 ஆயிரம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் 90 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் உள்ளிட்ட வழிகளின் மூலம் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நிலுவையில் உள்ள 14 ஆயிரத்து 859 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும், மீறினால் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.