தமிழக செய்திகள்

‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் கொரோனாவில் இருந்து விரைந்து நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து