தமிழக செய்திகள்

விருப்ப ஓய்வு கோரி சகாயம் ஐஏஎஸ் விண்ணப்பித்துள்ளதாக தகவல்

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐஏஎஸ் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வரும் நிலையில் விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கியமில்லாத ஒரே பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால் சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த சகாயம் 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை