தமிழக செய்திகள்

புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி

புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி நடந்தது.

தினத்தந்தி

தரகம்பட்டியில் உள்ள புனித வேளாங்கண்ணி மாத ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் தேர்பவனி கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையடுத்து புனித வேளாங்கண்ணி மாதா பூக்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் ஏற்றப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் ஆலயம் வந்தடைந்தது. பிறகு அன்னதானம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்