சென்னை,
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12-ந்தேதி(நாளை) வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கள், தொழில்வாரியான சம்மேளனங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யபடும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.