தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளுக்கு 'சீல்'

கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தினத்தந்தி

கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், இருப்பு வைத்து உபயோகிக்கவும் கூடாது என கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு முதன்மை அலுவலர் சாந்தி ஏற்கனவே அறிவித்து வந்தார். இந்த நிலையில் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும் நடந்து வந்த நிலையில், கோயம்பேடு மார்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று திடீரென அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த 2 கடைகளில் தடை செயயப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்த அதிகாரிகள், 2 கடைகளும், 3 மாதங்கள் செயல்பட தடை விதிக்கும் விதமாக உரிமமும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்