தமிழக செய்திகள்

ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25½ டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.8¾ லட்சத்துக்கு விற்பனையானது.

தினத்தந்தி

உழவர்சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 20 டன் காய்கறிகள் மற்றும் 5 டன் பழங்கள் என மொத்தம் 25 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 275-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,200 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.18-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.25-க்கும், புடலங்காய் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.50-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.60-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.40-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.24-க்கும், இஞ்சி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததாகவும், அவற்றின் விலையும் சற்று குறைந்தே காணப்பட்டதாகவும் உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு