தமிழக செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாநகராட்சி மேயர் காரை சிறைபிடித்து போராட்டம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் கோரிமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. சேலம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன் வார்டில் இந்த கோரிமேடு பகுதி உள்ளது.

இன்று காலையில் ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து மேயர் ராமச்சந்திரன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரின் காரை சிறைபிடித்த பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக மேயர் ராமச்சந்திரனிடம் கூறினார். வாரத்தில் 2 நாட்களாவது தடையின்றி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் ராமச்சந்திரன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...