தமிழக செய்திகள்

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 2-வது கட்டமாக 53,400 கொரோனா தடுப்பூசிகள் வந்தன

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2-வது கட்டமாக 53 ஆயிரத்து 400 கொரோனா தடுப்பூசிகள் நேற்று வந்தன.

தினத்தந்தி

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக உயிரிழப்புகளும் குறைந்தது. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக போடுவதற்காக 27 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசிகள் வந்தன.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 12 மையங்களில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் என முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தற்போது முன்கள பணியாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 16-ந் தேதி முதல் நேற்று வரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2-வது கட்டமாக சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான 53 ஆயிரத்து 400 கொரோனா தடுப்பூசிகள் நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதில் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஆகும். இதையடுத்து இந்த தடுப்பூசிகள் சேலம் மண்டல குளிர்சாதன நோய் தடுப்பு மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் கூறும் போது, சேலம் மண்டலத்துக்கு தேவையான 53 ஆயிரத்து 400 கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரபட்டன. இந்த தடுப்பூசி அரசு அறிவித்த பின்னர் 2-வது கட்டமாக போடப்படும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு