தமிழக செய்திகள்

சேலம்: பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி கலெக்டர் , எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது .

தினத்தந்தி

சென்னை,

சேலம், சேலம் அருகே கொல்லப்பட்டி எனும் பகுதியில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு நேற்று மாலை பட்டாசு குடோனில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி கலெக்டர் , எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது .

நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்தது வழக்கு தொடர்ந்துள்ளது.

விபத்து குறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கலெக்டர் , காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையிட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை