தமிழக செய்திகள்

புதுச்சேரி அருகே அடுத்தடுத்து மீட்கப்படும் சாமி சிலைகள்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் 7 பழங்கால உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் உலோக சிலைகள் விற்பனை செய்து வருகிறார்.

இவரது கடையில் உலோக சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அங்கு அப்படிப்பட்ட சிலைகள் ஏதும் இல்லை.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து கடைக்கு அருகில் உள்ள பூந்தோட்டத்தில் போலீசார் சோதனை செய்ததில், பூமிக்கு அடியில் 7 உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் இதே ஆரோவில் பகுதியில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து