தமிழக செய்திகள்

குடியாத்தம் அருகே சாமி சிலைகள், உண்டியல் திருட்டு

குடியாத்தம் அருகே சாமி சிலைகள், உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானபல்லி பஸ் நிறுத்தம் அருகே அங்காளபரமேஸ்வரி, நாகாலம்மன் புற்றுக் கோவில் உள்ளது. குடியாத்தம்-சித்தூர் சாலையில் அமைந்துள்ளதால் இந்த வழியாக செல்பவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்த நிலையில் கோவிலில் இருந்த 1 அடி உயர பித்தளையாலான நாகாலம்மன் சிலை, சிறிய பித்தளை பிள்ளையார் சிலை, பித்தளை விளக்குகள், மணி மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் திருட்டு நடைபெற்ற கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT