தமிழக செய்திகள்

பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு

சீர்காழி நகர் பகுதியில் பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி நகர் பகுதியில் பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றிதிரியும் பன்றிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. தென்பாதி, மாரிமுத்து நகர், திட்டை ரோடு, கற்பகம் நகர், என்.எஸ். பி. நகர், வி என்.பி.நகர், உப்பனாறு, மேட்டு தெரு, அகர திருக்கோளக்கா தெரு, பங்களா குளத்து மேட்டு தெரு, ரயில்வே ரோடு, தாளாளன் கோவில், புழுகாபேட்டை, கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு, கீழத்தென்பாதி, திருமுல்லைவாசல் ரோடு, மேல மாரியம்மன் கோவில் தெரு, கீழ மாரியம்மன் கோவில் தெரு, வ.உ.சி தெற்கு தெரு, வ.உ.சி. வடக்கு தெரு, ராஜாஜி தெரு, வல்லபாய் பட்டேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தினம் தோறும் காலை மாலை நூற்றுக்கு மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிகின்றன.

சுகாதார சீர்கேடு

மேலும் வீட்டில் யாரும் இல்லை என்றால் வீட்டிற்குள் புகுந்து உள்ளே இருக்கும் உணவுப் பொருட்களை உண்டு வீட்டை அசுத்தம் செய்து வருகிறது. சாலையில் விளையாடும் குழந்தைகளை பன்றிகள் கடித்து வருகிறது.

பன்றிகள் சாக்கடைகளில் படுத்து உருண்டு விட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு