தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

நாலாட்டின்புத்தூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தினத்தந்தி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோர் நினைவாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் பி.கே. நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர் மாரிச்சாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பழைய மாணவர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் ராணி, உமாராணி, பரமேஸ்வரி, பாக்கியமணி, சங்கர் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை