தமிழக செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

டி.புதூர் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. டி.புதூர் கிராமத்தில் 1 ஏக்கர் பரப்பில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

புங்கை, வேம்பு, பூவரசன், புளி போன்ற மரக்கன்றுகளை நட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூங்கொடி, கலவை தாசில்தார் சமீம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சானவாஸ், ஜெயஸ்ரீ, மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவன், ஊராட்சி மன்ற தலைவர் கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்