சென்னை,
அ.தி.மு.க. எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டாலும் சசிகலாவை நீக்குவது பற்றி தீர்க்கமான தகவலானது இடம்பெறவில்லை. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்னையோடுதான் ஓ.பி.எஸ். அணியினர் இணைந்தனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ். உள்பட அனைவரது முன்னிலையில் தான் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பரங்குன்றம் எம்.எல.ஏ. ஏ.கே. போஸ் கூறும்போது, சசிகலாவை நீக்குவோம் என்ற நிலை எப்போதுமே வராது என்றார்.
ஏ.கே.போஸ் நேற்று காலை தினகரன் அணிக்கு ஆதரவாகவும் இருந்தார். அதன்பிறகு எடப்பாடி அணிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.