தமிழக செய்திகள்

“சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - அமைச்சர் ஜெயகுமார்

சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இந்த மாத இறுதியில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சசிகலாவின் விடுதலை காரணமாக அதிமுகவில் தாக்கம் ஏற்படலாம் என பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சசிகலாவின் வருகை அதிமுகவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார். சசிகலாவின் வருகை தொடர்பாக சிலர் காணல் நீர் போன்ற செயற்கையான மாயை தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், 2021 தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை