தமிழக செய்திகள்

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்கால்,

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. அதாவது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் 20.12.2023- வரை வீற்றிருந்து பலன்களை வழங்க உள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சிக்காக திருநள்ளாறு சனீஸ்வர கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு