சென்னை,
சென்னை ஐகேர்ட்டில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், சுரேஷ் என்பவரை கடந்த ஜூலை 7-ந்தேதி ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்பி மிரட்டியதாக 3 நாட்களுக்கு பின்னர், அதாவது 10-ந்தேதி கெடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது ஏழுகிணறு பேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை பழிவாங்கவேண்டும் என்ற உள்நேக்கத்துடன் பேலீசார் பெய் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, மனுதாரரை விசாரணைக்கு அழைத்து பேலீசார் சம்மன் கெடுக்க சென்றதையும் வீடியே படம் பிடித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி பேலீசார் புதிய சம்மன் அனுப்பி வேண்டும். அதன்படி மனுதாரர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அதேநேரம், அவருக்கு எதிராக பேலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.