கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கேரளாவில் சோலார் பேனல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2020-இல் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமாவு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சரிதா தரப்பில் வழக்குரைஞா யாரும் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்டு, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சரிதா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, திபங்கர் தட்டா அடங்கிய அமர்வு விசாரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ராகுல் காந்தியின் வெற்றி செல்லும் என அறிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு