தமிழக செய்திகள்

கழுகுமலையில் குடிநீர் தட்டுப்பாடு:பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கழுகுமலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கழுகுமலை:

கழுகுமலையில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் நேற்று கழுகுமலை முருகன் கோவில் மேலவாசல் பகுதி அருகே பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கழுகுமலை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் வேல்ராஜா, பொருளாளர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்