தமிழக செய்திகள்

முத்திரைத்தாள் தட்டுப்பாடு

வேதாரண்யம் வட்டத்தில் 2 மாதங்களாக முத்திரைத்தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

வேதாரண்யம் வட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், பெயர் மாற்றம், வாடகை, வங்கி ரசீதுகள் ஆகியவை தொலைந்து விட்டால், ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் அந்தந்த அலுவலக முறைப்படி அதில் பூர்த்தி செய்து கொடுத்தால் தான் தொலைந்த ரசீது மூலம் அடகு வைத்த நகைகளை மீட்க முடியும். கடந்த 2 மாதங்களாக வேதாரண்யம் வட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினமும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம் வந்து பொதுமக்கள் கேட்டு வருகின்றனர். ஆனாலும் முத்திரைத்தாள் கிடைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேதாரண்யம் வட்டத்தில் தட்டுப்பாடின்றி முத்திரைத்தாள் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து