தமிழக செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கல்வி உதவித்தொகை

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ- மாணவிகளில் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

31.1.2023-க்குள்

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcma/tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர்நல இயக்கம், எழிலகம் கட்டிடம் 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?