கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை.!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது,சாலையில் கோஷமிட்டு ஊர்வலமாக செல்வது ,ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .

இதனால் பொது இடங்களில் ,மக்களுக்கு இடையூறுகளும் ,போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகின்றன .இதை தவிர்க்க அனைத்து கல்லூரிக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் பள்ளி,கல்லூரி ,மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலோ ,பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை