செஞ்சி,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
அதன்படி, செஞ்சி பேரூராட்சியில் உள்ள காந்தி பஜார் அரசு நடுநிலைப் பள்ளி, மசக்கராபுரம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவிதேஜா தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் சற்குணம் ஷேக் மூசா, ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
செஞ்சி ஒன்றியத்தில் 78 பள்ளிகளில் 4381 மாணவர்களும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 100 பள்ளிகளில் 3974 மாணவர்கள்காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செல்வகுமார், தாசில்தார் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன், செஞ்சி வட்டார தொடக்க கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி மன்ற துணை தலைவர்ராஜலட்சுமி செயல் மணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் அஞ்சாஞ்சேரி கணேசன், ஒன்றிய தலைவர் வாசு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.