தமிழக செய்திகள்

கொல்லிமலை அடிவாரத்தில் பழுதடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடிப்பு

தினத்தந்தி

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இயற்கை சூழலில் அமைந்த இந்த பள்ளி கட்டிடம் தற்போது பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே அந்த இடத்தில் 2 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.

பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் 2 வகுப்பறை கட்டிடங்களுக்கு மேல் கூடுதலாக 2 வகுப்பறைகளும், கழிவறைகள் கட்டகோரி சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பிரகாஷ் ஆகியோரிடம் கோரிக்க வைத்துள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்