திருமக்கோட்டை:
திருமக்காட்ட பகுதியில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் தட்டாங்கோவில் பகுதியில் வீடுகள் ஏதும் இன்றி சாலைப் பகுதியில் வசித்து வரும் கணவரை இழந்த பெண்ணின் மகள் மற்றும் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்து வந்த ஒரு சிறுவன் ஆகிய 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தட்டான் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு சேர்க்கப்பட்டனர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வைரமுத்து, தலைமை ஆசிரியை லதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.