நன்னிலம்;
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவனுக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினா. இதில் சிறுமி கர்ப்பமடைந்தாள்.இதுகுறித்து சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சிறுவன் மீது பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.