சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பள்ளி மாணவிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சங்கரன்கோவில் காயிதே மில்லத் 1-ம் தெருவை சேர்நத பீர்மைதீன் மகன் அபு நிசார் (வயது 27), முகம்மது சலீம் மகன் முகமது அலி (22), அப்துல் காதர் மகன் காஜா மைதீன் (19) ஆகிய 3 பேரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
போக்சோவில் கைது
இதனை தொடர்ந்து அபு நிசார், முகமது அலி, காஜா மைதீன் ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.